உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தனியார் பஸ் சிறைபிடிப்பு

தனியார் பஸ் சிறைபிடிப்பு

காரிப்பட்டி:வாழப்பாடி அடுத்த காரிப்பட்டியை சேர்ந்த சில பெண்கள், நேற்று முன்தினம் இரவு: 9:35 மணிக்கு, சேலம் புது பஸ் ஸ்டாண்டில் தனியார் பஸ்சில் ஏறினர். அப்போது காரிப்பட்டியில் பஸ் நிற்காது என, கண்டக்டர் கூறி, 5 பெண் பயணியரை, புது பஸ் ஸ்டாண்ட் அருகே வழியில் இறக்கிவிட்டார். இதையடுத்த காரிப்பட்டி இளைஞர்கள், பெண்களின் உறவினர்கள், அன்று இரவு, 10:10 மணிக்கு, காரிப்பட்டி பைபாஸில் அந்த தனியார் பஸ்சை சிறை பிடித்தனர். தொடர்ந்து டிரைவர், கண்டக்டருடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், 11:00 மணிக்கு விடுவித்ததால் பஸ் புறப்பட்டது. அதேபோல், வாழப்பாடி, காரிப்பட்டி, அயோத்தியாப்பட்டணம், புத்திரகவுண்டன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பயணியரை ஏற்றாமல், விதிமீறி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க, மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை