உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தனியார் பள்ளி மாணவர்கள் மோதல் வேனில் இருந்து தள்ளப்பட்ட மாணவன் காயம்

தனியார் பள்ளி மாணவர்கள் மோதல் வேனில் இருந்து தள்ளப்பட்ட மாணவன் காயம்

இடைப்பாடி: சேலம் மாவட்டம், இடைப்பாடி தாவாந்தெரு பகுதியில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இங்கு, 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். நேற்று மாலை பள்ளி முடிந்து, 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை அழைத்து கொண்டு பள்ளி வேன் புறப்பட்டது. வேனை ரித்திகுமார், 25, ஓட்டினார்.வெள்ளாண்டிவலசு பகுதியில் சென்றபோது, 7ம் வகுப்பு மாணவ-னுக்கும், 9ம் வகுப்பு மாணவனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், 9ம் வகுப்பு மாணவன் வேனில் இருந்து கீழே விழுந்த-தாக கூறப்படுகிறது. அப்போது டிரைவர் மற்றும் சக மாண-வர்கள், அந்த மாணவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்து-வமனைக்கு கொண்டு சென்றனர். பின், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இடைப்பாடி போலீசார், 7ம் வகுப்பு மாணவரிடம் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை