ஓமலுார்: ஓமலுாரில் உள்ள சேலம் சாப்ட் டென்னிஸ் அகாடமி மைதானத்தில், இரண்டாவது மாநில அளவிலான மினி சாப்ட் டென்னிஸ் போட்டி கடந்த, 27, 28ல் நடந்தது. சேலம், வேலுார், கரூர், கோவை, கடலுார், ராணிப்பேட்டை உள்பட, 25 மாவட்டங்களில் இருந்து, 300 வீரர் வீராங்கனைகள், ஒற்றையர், இரட்டையர், குழு மற்றும் கலப்பு போட்டிகளில் கலந்து கொண்டனர்.ஆடவர், 9 வயதுக்குட்பட்ட பிரிவில், சேலம் ஸ்ரீ சாய் தங்கப்பதக்கம், வேலுார் கிரீஸ் கேப்ரியல் வெள்ளி பதக்கம், மகளிர் பிரிவில் சேலம் லக் ஷிதா தங்கப்பதக்கம், கடலுார் பூஜாஸ்ரீ வெள்ளி பதக்கம் வென்றனர். 11 வயது ஆடவர் பிரிவில், வேலுார் ராகவ் தங்கம், சேலம் ஆகாஷ் ஆனந்த் வெண்கலம், பெண்கள் பிரிவில் கோவை மகா கீர்த்தி தங்கப்பதக்கம், வேலுார் வர்கா வெள்ளி பதக்கம் வென்றனர். 13 வயதுக்கு உட்பட்ட ஆடவர் பிரிவில் வேலுார் சாய் எஸ்வின் தங்கம், டிவைஸ் வெள்ளி, மகளிர் பிரிவில் சேலம் தனிகா தங்கம், வேலுார் மதுமதி வெள்ளி பதக்கம் வென்றனர். மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் தனிக்கா தங்கப்பதக்கம், கலப்பு இரட்டையர் மற்றும் குழு போட்டியில் வெள்ளிபதக்கம் வென்றனர்.வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு, ஓமலுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகநாதன் பதக்கம், சான்றிதழ்களை வழங்கினார். சேலம் சாப்ட் டென்னிஸ் சங்கத் தலைவர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.