உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மரவள்ளி கொள்முதல் விலைஉயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்

மரவள்ளி கொள்முதல் விலைஉயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்

மரவள்ளி கொள்முதல் விலைஉயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்சேலம்:மரவள்ளி கொள்முதல் விலையை உயர்த்தி கேட்டு, சேலம் சேகோசர்வ் நிறுவனம் முன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார்.அதில் மாவட்ட துணைத்தலைவர் தங்கவேலு பேசுகையில், ''கலெக்டர் தலைமையில் நடந்த முத்தரப்பு கூட்டத்தில் மரவள்ளி கிழங்கின் மாவு சத்துக்கு ஏற்ப, பாயின்டுக்கு, 300 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன், 270 ரூபாய்க்கு விற்ற மரவள்ளி, தற்போது, 220 ரூபாயாக குறைந்துவிட்டது. ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், சேகோ நிறுவனம் சேர்ந்து, விவசாயிகளை வஞ்சித்துவிட்டது,'' என்றார்.தொடர்ந்து சேகோசர்வ் நிறுவன இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மாவட்ட செயலர் ராமமூர்த்தி, ஐக்கிய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் அரங்க சங்கரய்யா, செயலர் சரவணன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை