உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 17ல் சென்னையில் போராட்டம்; பா.ம.க.,வினருக்கு அழைப்பு

17ல் சென்னையில் போராட்டம்; பா.ம.க.,வினருக்கு அழைப்பு

வாழப்பாடி: -வாழப்பாடி, முத்தம்பட்டியில், அன்புமணி ஆதரவு, கிழக்கு ஒன்றிய பா.ம.க., சார்பில், கட்சி வளர்ச்சி பணி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய செயலர் முருகன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் குணசேகரன், மாநில இளைஞரணி செயலர் வடிவேலன் பேசினர். அதில் உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட கட்சிப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக வரும், 17ல், சென்னையில் மாநில தலைவர் அன்புமணி தலைமையில் நடக்க உள்ள போராட்டத்தில் திரளானோர் பங்கேற்க, நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து சேசன்சாவடியிலும் ஆலோசனை கூட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ