உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்

ஓமலுார்: சேலம் மாவட்ட 24 மனை தெலுங்கு செட்டியார் நல சங்கம் சார்பில், 15ம் ஆண்டு மகா சபை கூட்டம், கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, ஓமலுாரில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மாதேசன் தலைமை வகித்தார்.அதில் பெங்களூரு அகில இந்திய சாதுசெட்டி, 24 மனை தெலுங்கு செட்டியார் நல சங்கத்தலைவர் பாலகிருஷ்ணா, 2023 - 24ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர், இதர மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கினார். முன்னதாக கூட்டத்தில் ஆண்டறிக்கை, வரவு செலவு வாசிக்கப்பட்டன. மாநில பொதுச்செயலர் ராஜவடிவேல், மாவட்ட பொருளாளர் சித்தன் செட்டியார், ஓமலுார் கிளை தலைவர் அங்கப்பன், காடையாம்பட்டி கிளை தலைவர் சின்னுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி