உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2 இடங்களில் வேட்பு மனு பெற ஏற்பாடு

2 இடங்களில் வேட்பு மனு பெற ஏற்பாடு

சேலம் : சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தாதேவி அறிக்கை:லோக்சபா பொதுத்தேர்தல் வேட்பு மனுதாக்கல், மார்ச், 20ல்(இன்று) தொடங்கி, 27ல் நிறைவடைகிறது. மறுநாள் மனு பரிசீலனை நடக்கிறது. 30ல் வேட்புமனுவை திரும்ப பெற கடைசிநாள். அன்று மாலை, வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். ஏப்., 19ல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. வேட்பு மனுவை வேட்பாளர் அல்லது அவரை முன்மொழிபவர் நேரிலோ அல்லது Suvidha Portal https:/suvidha eci.gov.inஎன்ற இணையதளம் மூலமோ தாக்கல் செய்ய வழி செய்யப்பட்டுள்ளது.சேலம் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது சூரமங்கலம் மேற்கு தாலுகாவில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுதாக்கல் செய்யலாம். காலை, 11:00 முதல் மதியம், 3:00 மணி வரை வேட்பு மனு பெறப்படும். அரசு விடுமுறை தவிர்த்து வரும், 27 வரை மனுதாக்கல் செய்யலாம். வேட்பாளருடன் அதிகபட்சம், 3 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. அதுவும் மனுதாக்கல் நடக்கும் அலுவலகத்தில், 100 மீ., சுற்றளவுக்குள் அனுமதிக்கப்படும். அத்துடன் வேட்பாளருடன், 5 பேருக்கு மட்டும் அனுமதி. தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை