உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

சேலம் : பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மட்டும் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர். அதில் பங்கேற்கும்படி, சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் அதன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் ஊதிய மாற்ற பிரச்னைக்கு உடனே தீர்வு காணுதல்; தாமதம் செய்யாமல் ஊதிய தேக்க நிலை பிரச்னையை தீர்த்து வைத்தல்; '4ஜி, 5ஜி' சேவைகளை உடனே தொடங்குதல்; புது பதவி உயர்வு கொள்கையை உருவாக்குதல்; 'அவுட்சோர்சிங்' பணிகளை நிறுத்தல்; குறைந்தபட்ச மாத ஊதியம், 26,000 ரூபாய் என்பதை அமல்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஹரிஹரன், உதவி தலைவர் ராஜன், ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட செயலர் செல்வம், ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் மதியழகன் உள்பட பலர் பங்கேற்றனர். பெரும்பாலான ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால், பி.எஸ்.என்.எல்., அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ