உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பி.டி.ஓ., சஸ்பெண்ட் ரத்து தலைவாசலுக்கு நியமனம்

பி.டி.ஓ., சஸ்பெண்ட் ரத்து தலைவாசலுக்கு நியமனம்

ஆத்துார், பி.டி.ஓ.,வுக்கு விதிக்கப்பட்ட, 'சஸ்பெண்ட்' ரத்து செய்து, தலைவாசலில் பணியிடம் வழங்கி, கலெக்டர் உத்தரவிட்டார்.சேலம் மாவட்டம் ஆத்துார் ஒன்றிய அலுவலகத்தில், பி.டி.ஓ.,வாக பரமசிவம் என்பவர் பணிபுரிந்தார். அவர் மீது, பெண் துாய்மை பணியாளர், பாலியல் புகார் அளித்தார். கலெக்டர் பிருந்தாதேவி விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டார்.ஊரக வளர்ச்சி துறை தணிக்கையாளர் மதுமிதா, கூடுதல் திட்ட அலுவலர் நந்தினி ஆகியோர், கடந்த ஏப்., 7ல் ஆத்துார் ஒன்றிய அலுவலகத்தில், 20க்கும் மேற்பட்ட பெண்களிடம் விசாரித்து, அதன் அறிக்கையை, கலெக்டரிடம் வழங்கினர். தொடர்ந்து, பரமசிவம், அவருக்கு உடந்தையாக இருந்ததாக, அலுவலக உதவியாளர் கணேசன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இந்நிலையில் பரமசிவம் மீதான, 'சஸ்பெண்ட்' உத்தரவை நேற்று முன்தினம், கலெக்டர் ரத்து செய்தார். தொடர்ந்து நேற்று அவருக்கு, தலைவாசல் பி.டி.ஓ.,வாக(கி.ஊ.,) பணி நியமனம் வழங்கி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ