மேலும் செய்திகள்
குடிநீரின்றி மக்கள் தவிப்பு
21-Apr-2025
மகுடஞ்சாவடி பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண் தொழிலாளர்கள்மகுடஞ்சாவடி:மகுடஞ்சாவடி பி.டி.ஓ., அலுவலகத்தை, 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் முற்றுகையிட்டனர்.சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியம், கூடலுார் ஊராட்சியில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், 1,200க்கும் மேற்பட்ட பெண்கள் சுழற்சி முறையில் வேலை செய்து வருகின்றனர். இவர்களை கண்காணித்து வேலை வாங்கும் பணியில், பணிதள பொறுப்பாளர் பணியில், 2016 முதல் அமுதா, வாசுகி, அனிதவேணி பணிபுரிந்து வந்தனர்.இந்நிலையில் இவர்களை, சில நாட்களுக்கு முன்பு இடமாறுதல் செய்து விட்டு, நேற்று முதல் வேறு பணியாளர்களை நியமித்தனர். அதனால் கூடலுார் கிராமத்தை சேர்ந்த, ஏரி வேலை செய்யும் பெண்கள், 100 பேர் நேற்று காலை, 11:30 மணியளவில் திரண்டு வந்து, மகுடஞ்சாவடி பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், இடமாற்றம் செய்யப்பட்ட மூன்று பேரை, மீண்டும் அதே பகுதியில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூச்சலிட்டனர்.பின்னர், பி.டி.ஓ., சத்தியேந்திரனிடம் மனு அளித்ததை தொடர்ந்து, மீண்டும் அவர்களே பணிபுரிவார்கள், இடமாற்றம் இல்லை என கூறியதையடுத்து, பெண்கள் கலைந்து சென்றனர். இதனால், இரண்டு மணி நேரம் பி.டி.ஓ., அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
21-Apr-2025