மழையால் ஏற்காடு குளு குளு சுற்றுலா பயணியரின்றி வெறிச்
ஏற்காடு, :ஏற்காட்டில் சில நாட்களாக, பனிமுட்டத்துடன் கூடிய மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதலே, பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது.இதனால் ஏற்காடு முழுதும், 'குளுகுளு' என மாறியது. ஆனால் வரும், 20ல், தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், மக்கள் அனைவரும் புத்தாடை, பட்டாசு, இனிப்பு வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.இதனால் சில நாட்களாகவே, ஏற்காடு வரும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. நேற்று ஏற்காடு, 'குளுகுளு' என மாறியும், சுற்றுலா பயணியர் இல்லாதால், படகு இல்லம், அண்ணா, ஏரி பூங்காக்கள், ரோஜா தோட்டம், காட்சி முனைகள் உள்ளிட்ட பகுதிகளில், சுற்றுலா பயணியர் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.