உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விவசாயியை கொன்றவர் மீது நடவடிக்கை கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா

விவசாயியை கொன்றவர் மீது நடவடிக்கை கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா

சேலம் : விவசாயியை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம் ஆத்துார் மேல்கோம்பையை சேர்ந்த நீலாவதி தலைமையில், 50க்கும் மேற்பட்டோர், நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். போலீசார் தடுத்ததால், சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். உடனே போலீசார் பேச்சு நடத்தி, அதில் 5 பேரை மட்டும் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து நீலாவதி கூறியதாவது: கணவர் ஜோதிவேலுக்கு விவசாய நிலத்தில் உள்ள மரங்களை அகற்றுவது குறித்து பக்கத்து நிலத்தினரிடம் தகராறு இருந்தது. அவர்கள், கடந்த, 30ல், என் கணவரை தாக்கியதில், படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து மல்லியக்கரை போலீசில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. கணவரை கொன்றவர்களை கைது செய்யும் வரை, அவரது உடலை வாங்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை