உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாலை பணி நிறுத்தத்தால் 3 ஆண்டாக அவதி

சாலை பணி நிறுத்தத்தால் 3 ஆண்டாக அவதி

பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து, 9வது வார்டில் பூ மலை கரடு சாலை புதுப்பிப்பு பணி, 3 ஆண்டுக்கு முன் தொடங்கப்பட்டது. ஆனால் தார்ச்சாலை பட்டா நிலத்தில் உள்ளதாக, ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்கவே, 3 ஆண்டாக சாலை பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது அச்சாலை மேடு, பள்ளமாக மாறி, ஜல்லிகள் சிதறி கிடப்பதால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் அச்சாலையில், 8 தெருவிளக்கு அமைக்க, கம்பம் கொண்டு வரப்பட்ட நிலையில், அதுவும் கிடப்பில் போடப்பட்டது.இதுகுறித்து, 9வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ரவிக்குமார் கூறுகையில், ''பட்டா நில உரிமையாளர், சாலைக்கு நிலம் தர சம்மதித்துள்ளார். அவர் தானமாக வழங்கும் நிலம், செயல் அலுவலர் பெயரில் பதிவு செய்யப்படும். சமீபத்தில் நடந்த கவுன்சிலர் கூட்டத்தில், நிலம் தானம் பெற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் சாலை அமைத்து தெருவிளக்கு பொருத்தப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்