உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வெள்ளி வியாபாரி கொலை நீதிமன்றத்தில் ரவுடி சரண்

வெள்ளி வியாபாரி கொலை நீதிமன்றத்தில் ரவுடி சரண்

சேலம்:சேலம், செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த, வெள்ளி வியாபாரி சங்கர், கடந்த, 2ல் சாலையில் நடந்து செல்லும்போது கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் அவரது மைத்துனர் சுபாஷ்பாபு, கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரிந்தது. சுபாஷ்பாபு உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். கூலிப்படை தலைவனான ரவுடி பாஸ்கர், அவரது தம்பி ராஜாவை, போலீசார் தேடினர். இந்நிலையில் நேற்று, சேலம் ஜே.எம்.எண்: 4ல் பாஸ்கர் சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் யுவராஜ் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ