உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஊரக திறனாய்வு தேர்வு; ஒரே பள்ளியில் 20 பேர் தேர்ச்சி

ஊரக திறனாய்வு தேர்வு; ஒரே பள்ளியில் 20 பேர் தேர்ச்சி

சேலம் : தமிழகத்தில் கிராமப்புற பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும்படி, 9ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் மாவட்டத்துக்கு, 50 மாணவர், 50 மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, 4 ஆண்டுகளுக்கு தலா, 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டு தேர்வு, கடந்த டிச., 21ல் நடந்தது. அதில் மாவட்டம் வாரியாக தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, 20 மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரே பள்ளியில், 20 பேர் தேர்ச்சி பெற்றதால், அப்பள்ளி ஆசிரியர்கள், மாணவியருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ