உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நில அபகரிப்பு புகார் மீது நடவடிக்கை கோரி முற்றுகை

நில அபகரிப்பு புகார் மீது நடவடிக்கை கோரி முற்றுகை

சேலம்: சங்ககிரி அருகே உள்ள நிலத்தை ஆக்ரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்த போலீஸை கண்டித்து, 30க்கும் மேற்பட்டோர் நில அபகரிப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சங்ககிரியில் எபிநேசர் என்பவருக்கு சொந்தமான, 33 ஏக்கர் நிலத்தை சதாசிவம், சண்முகம், மோகன்குமார், மணி, லோகநாதன், ரமேஷ் கார்த்தி ஆக்கிரமித்துள்ளனர்.இந்த நிலத்தை மீட்கக்கோரி, எபிநேசரின் வாரிசுகளான மனோஜ், சாந்தி, அம்மு, ராஜபிரகாஷ் உட்பட, 46 பேர் சேலம் மாவட்ட எஸ்.பி., மற்றும் நில அபகரிப்பு மீட்பு அலுவலகம் ஆகிவற்றில் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகார்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.மேலும், விசாரணை என்ற பெயரில் கடந்த இரண்டு மாதமாக போலீஸார் அலைக் கழிப்பு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், நில அபகரிப்பு மீட்பு அலுவலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இன்ஸ்பெக்டர் தட்சணாமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி