உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதல்வர் நிவாரண நிதி ரூ.5 லட்சம் வழங்கல்

முதல்வர் நிவாரண நிதி ரூ.5 லட்சம் வழங்கல்

சேலம் : சேலம் மாவட்டத்தில், ஏழ்மையில் உள்ள, 20 நோயாளிகள், இதயம், சிறுநீரக மாற்று, புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் கல்லீரல் போன்ற உயிர்காக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். அவர்களுக்கு, தமிழக முதல்வர் நிவாரண நிதியில் இருந்து தலா, 25 ஆயிரம் ரூபாய்க்கான வங்கி காசோலையை, கலெக்டர் மகரபூஷணம் வழங்கினார். 19 நோயாளிகளுக்கு, 25 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் நான்கு லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், ஒரு நபருக்கு, 21 ஆயிரம் ரூபாயும் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ராஜசேகரன், ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் சித்திக் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி