கூட்டுறவு சங்கத்தில்பொட்லா மீன் விற்பனை
கூட்டுறவு சங்கத்தில்பொட்லா மீன் விற்பனைமேட்டூர்,: மீன்துறை உரிமம் பெற்ற மீனவர்கள், மேட்டூர் அணையில் பிடிக்கும் மீன்களை, அணை மீனவர் கூட்டுறவு சங்கத்தில் விற்கின்றனர்.கடந்த, 16ல், 227 கிலோ ஜிலேபி மீன்கள் உள்பட, 435 கிலோ, 17ல், 269 கிலோ ஜிலேபி உள்பட 481 கிலோ மீன்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர். கட்லா, ரோகு, மிர்கால் உள்ளிட்ட, மக்கள் விரும்பி வாங்கும் மீன்கள் குறைவாகவே கொண்டு வரப்பட்டன.மீன்கள் வரத்து குறைவாக இருக்கும்போது, அதை ஈடுகட்ட கூட்டுறவு சங்கம் சார்பில், ஆந்திராவில் இருந்து வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வரும் பாறை, பொட்லா ரக மீன்களை கொள்முதல் செய்வர். அதன்படி நேற்று, வியாபாரிகளிடம் கொள்முதல் செய்த பொட்லா ரக மீன்களை, சங்க ஊழியர்கள் விற்றனர்.ரோகு, மிர்கால் மீன்களை, மக்கள் அதிகம் வாங்குவர். அதேபோன்று பொட்லா மீன்கள் இருக்கும். கிலோ, 140 ரூபாய்க்கு கொள்முதல் செய்து, 165 ரூபாய்க்கு விற்றதாக, சங்க ஊழியர்கள் கூறினர்.