உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.1.51 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

ரூ.1.51 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

சேலம்: சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், அம்மாபேட்டை, இடைப்-பாடி, ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட, 13 இடங்களில் உழவர் சந்-தைகள் உள்ளன. ஆடி பிறப்பையொட்டி, நேற்று சந்தைகளில் காய்கறிகள், பழங்கள், தேங்காய் வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது. தக்காளி கிலோ, 50 முதல் 80 ரூபாய், சின்ன வெங்காயம், 40, பெரியவெங்காயம், 50, பச்சைமிளகாய், 74, கத்தரி, 65, வெண்-டைக்காய், 28, பீர்க்கங்காய், 35, சுரக்காய், 24, புடலங்காய், 34, பாகற்காய், 70, தேங்காய், 30 முதல் 36, முள்ளங்கி, 30, பீன்ஸ், 68 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வாழைப்பழம் கிலோ, 55 முதல் 85, கொய்யா, 50, மாதுளை, 160, சாத்துக்குடி, 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.மாவட்டத்தில் உள்ள, 13 உழவர் சந்தைகளில், 1,042 விவசா-யிகள், பல்வேறு வகையான காய்கறிகள், பழங்கள் என, 319 டன் கொண்டு வந்தனர். இதை, 77,110 நுகர்வோர், ரூ.1.51 கோடிக்கு வாங்கி சென்றதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி