உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அ.தி.மு.க., கட்சி அலுவலகங்கள் திறப்பு

அ.தி.மு.க., கட்சி அலுவலகங்கள் திறப்பு

சேலம்: சேலம் மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு, ஒவ்வொரு வார்டிலும், அ.தி.மு.க., சார்பில், கட்சி அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க.,- தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சி வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று, அ.தி.மு.க., மேயர் வேட்பாளர் மற்றும் கவுன்சிலர் வேட்பாளர்கள், வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, ஒவ்வொரு வார்டிலும், அ.தி.மு.க., சார்பில் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டு வருகிறது. பல வார்டுகளில், கவுன்சிலர் வேட்பாளர்கள் பிரச்சார களத்தில் குதித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ