உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மகன் இறந்ததால்அதிர்ச்சியில் தாய் பலி

மகன் இறந்ததால்அதிர்ச்சியில் தாய் பலி

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே மகன் இறந்ததால், அதிர்ச்சியடைந்த தாயும் இறந்தார்.கெங்கவல்லி அருகே உள்ள கூடமலையை சேர்ந்தவர் முருகன் (35). மின்வாரியத்தில் அலுவலராக பணி புரிந்து வந்த அவர், நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் இறந்தார்.அதனால், அதிர்ச்சியடைந்த அவரது தாய் சம்பூர்ணம் மயங்கி கீழே விழுந்தார். நேற்றிரவு 3.30 மணியளவில், சம்பூர்ணமும் பரிதாபமாக உயிரிழந்தார். மகன் இறந்த துக்கம் தாங்காமல், அதிர்ச்சியில் தாயும் இறந்த சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை