உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 7 பேர் ஜாமீன் மனு விசாரணைசெப்., 20ம் தேதி ஒத்திவைப்பு

7 பேர் ஜாமீன் மனு விசாரணைசெப்., 20ம் தேதி ஒத்திவைப்பு

சேலம்: சேலம், கோயம்புத்தூர் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் பிரேம்நாத்துக்கு சொந்தமான, புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள நிலத்தை அபகரிக்க முயற்சித்ததாக, மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், பாரப்பட்டி சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் லட்சுமணன், ஸ்ரீரங்கநாதன், பாலகுருமூர்த்தி, வக்கீல் தெய்வலிங்கம் உட்பட, 16 பேர் மீது குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.வீரபாண்டி ஆறுமுகம், சுரேஷ்குமார், சேகர், லட்சுமணன், பாலகுருமூர்த்தி, ஸ்ரீரங்கநாதன், சரவணன், ஜான், முரளி, வக்கீல் தெய்வலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில், லட்சுமணன், பாலகுருமூர்த்தி, ஸ்ரீரங்கநாதன், முரளி, சரவணன், ஜான் அலோசியஸ், நாராயணன் ஆகிய ஏழு பேர், ஜாமீன் கேட்டு, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை, மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் முன்னிலையில் நேற்று நடந்தது. அப்போது, ஏழு பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை, வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !