உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் சின்ன செய்திகள்

சேலம் சின்ன செய்திகள்

வரும் 27ல் ஜல்லிக்கட்டுபனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, நிலவாரப்பட்டி ஊராட்சி மூலக்காடு, ராஜாராம் தோட்டத்தில் வரும், 27ல் ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது. இதில், 200க்கும் மேற்பட்ட காளைகள், ஏராளமான வீரர்கள் பங்கேற்க உள்ளதாக, அதன் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வரும், நிலவாரப்பட்டி ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள் தெரிவித்தனர்.தென்னை மரம் ஏறும்கருவி வழங்கல்பனமரத்துப்பட்டி: சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், தென்னை வளர்ச்சி வாரிய நிதி உதவியுடன், 6 நாட்கள் மரம் ஏறும் பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த, 19ல் தொடங்கிய பயிற்சியில், தென்னை மரம் ஏற உதவும் கருவியை கையாள பயிற்சி அளிக்கப்பட்டது. மல்லுார், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பாரத ஸ்டேட் வங்கி அலுவலர்கள், உழவர்களுக்கான சிறுசேமிப்பு, காப்பீடு குறித்து விளக்கினர். தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் பயிற்சியில் பங்கேற்றோருக்கு மரம் ஏறும் கருவி இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு ஓராண்டுக்கு, 5 லட்சம் ரூபாய்க்குரிய காப்பீடு தொகைக்கான பிரிமீயத்தை வாரியமே ஏற்றது. சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர் மாலதி, பயிற்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை