உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் சிலவரி செய்திகள்

சேலம் சிலவரி செய்திகள்

வேன் மீது பைக் மோதல்தொழிலாளி உயிரிழப்புமேச்சேரி: மேச்சேரி, பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ், 23. கூலித்தொழிலாளியான இவர் கடந்த, 27 மதியம், 2:30 மணிக்கு, 'யமஹா' பைக்கில் ஹெல்மெட் அணியாமல் மேச்சேரியில் இருந்து ஓமலுார் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அவருடன், எம்.காளிப்பட்டியை சேர்ந்த மற்றொரு தொழிலாளி தீபக், 20, என்பவரும் இருந்தார். பஞ்சுகாளிப்பட்டி அருகே சென்றபோது, முன்புறம் சென்ற, மினி சரக்கு வேன் மீது பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரமேஷ், தீபக், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு நேற்று முன்தினம் ரமேஷ் உயிரிழந்தார். மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.உள்ளாட்சி பணியிடபோட்டித்தேர்வுசேலம்: நகர்புற உள்ளாட்சி, குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள, 2,200 பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். சேலம் மாவட்டத்தில், 12,574 பேர் விண்ணப்பித்திருந்தனர். கருப்பூர் அரசு பொறியியல், சோனா, அன்னபூர்ணா இன்ஜினியரிங் உள்பட, 8 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. டிப்ளமோ பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேற்று காலை, மதியம் என, தேர்வுகள் நடத்தப்பட்டன. இன்று பட்டப்படிப்பு பணியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது.குழந்தை பெற்றெடுத்த25 நாளில் தாய் பலிஓமலுார்: ஓமலுார், வ.உ.சி., நகரை சேர்ந்தவர் சதீஷ், 26. ஓமலுாரில் இருசக்கர வாகன பழுதுபார்ப்பு கடை வைத்துள்ளார். இவரது மனைவி அபிநயா, 23. இவர்களுக்கு ஓராண்டுக்கு முன் திருமணமானது. 25 நாட்களுக்கு முன், அபிநயாவுக்கு ஓமலுார் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து அவர், காடையாம்பட்டியில் உள்ள தாய் வீட்டில் இருந்தார். இரு நாட்களாக உடல் நிலை சரியின்றி இருந்தார். நேற்று இரவு உடல் நிலை மோசமாக, ஓமலுார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், அபிநயா இறந்துவிட்டதாக தெரிவித்தார். தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.ரயிலில் இருந்து விழுந்தஇன்ஜி., மாணவர் சாவுசேலம், ஜூன் 30-திருப்பத்துார் மாவட்டம் கிழக்கு பத்தனவாடி, கந்திலியை சேர்ந்த பிரகாசம் மகன் சக்திமகி, 22; ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், மூன்றாமாண்டு இன்ஜினியரிங் படித்து வந்தார். ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு, கோவை - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவற்ற பெட்டியில் நேற்று முன்தினம் பயணித்தார். டேனிஷ்பேட்டை - லோகூர் இடையே ரயில் சென்றபோது, கழிப்பறைக்கு சென்ற சக்திமகி தவறி விழுந்தார். படுகாயமடைந்தவர் சம்பவ இடத்தில் பலியானார். சேலம் ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.சம்பள இழப்பு தொகைக்குநீதிமன்றத்தை நாட முடிவுசேலம்,: சேலம், சூரமங்கலம், புது ரோடு அருகே நாம் தமிழர் தொழிற்சங்கத்துடன் இணைக்கப்பட்ட தலேமா(தலேமா எலக்ட்ரானிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்) மின்னணு தொழிலாளர் பாதுகாப்பு சங்க செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. சங்க செயலர் தங்கம் தலைமை வகித்தார். தொழிற்சங்க மாநில இணை செயலர் சுரேஷ்பாபு பேசினார்.அதில் சம்பள இழப்பு தொகையை பெற நீதிமன்றத்தை நாடுதல்; தொழிலாளர்கள், 230 பேரை ஆள்குறைப்பு செய்ய முடிவெடுத்து அவர்களுக்கு தனித்தனியே கடிதம் அனுப்பிய நிறுவனத்துக்கு ஆட்சேப கடிதம் அனுப்புவதோடு அப்பிரச்னையையும் சட்டப்படி எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகர் செயலர் தங்கதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை