சேலம்:சபரிமலை அய்யப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள், கார்த்-திகை முதல் தேதியில் மாலை அணிந்து, 48 நாட்களான, ஒரு மண்டல விரதத்தை தொடங்குவர். அதற்கு புதிது புதிதாக சுவாமி அய்யப்பன், விநாயகர் உருவ டாலர்கள் கோர்க்கப்பட்ட சந்தன, துளசிமணி மாலைகள் வாங்கி அணிவர். புதிதாக சபரிமலைக்கு செல்லும் கன்னி சுவாமி பக்தர்கள், மணி மாலைகள், காவி வேட்டி துண்டுகள், இருமுடி பைகள், போர்வைகளை வாங்குவர். அதன்படி இன்று கார்த்திகை பிறப்பால், சேலம் ராஜகணபதி கோவில் அருகே உள்ள சந்தன, துளசி மணி மாலை விற்பனை கடைகளில், நேற்று அய்யப்ப பக்தர்கள் கூட்டம் களைகட்டியது.இதுகுறித்து, துளசிமணி மாலை, காவி வேட்டி வியாபாரிகள் கூறியதாவது: அய்யப்ப பக்தர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் விற்று வருகிறோம். கார்த்திகை முதல் தை வரை, சீசன் காலம். துளசிமணி மாலைகள், 100 முதல், 150 ரூபாய், சந்தன மாலைகள், 150 முதல், 200 ரூபாய், காவி, நீலம், கருப்பு நிற வேட்டிகள், 150 முதல், 500 ரூபாய் வரை விற்கப்படு-கிறது. தவிர இருமுடி பை, ஜோல்னா பை, மணி பர்சுடன் கூடிய பெல்ட், பவுச் உள்ளிட்டவை விற்கப்படுகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.