உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சந்தன கட்டை கடத்தல் விவகாரம்; ஆலை நடத்திய 2 பேருக்கு சம்மன்

சந்தன கட்டை கடத்தல் விவகாரம்; ஆலை நடத்திய 2 பேருக்கு சம்மன்

சேலம்: சேலம், சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர்கள், கடந்த, 3ல், 1.5 டன் சந்தன கட்டை கடத்தியதாக, கேரள மாநிலத்தை சேர்ந்த ஆறு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதில் நான்கு பேரை வனத் துறையினர் காவலில் எடுத்து விசாரித்தனர். தொடர்ந்து புதுச்சேரி அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மகளுக்கு சொந்தமான இடத்தில், குத்தகை முறையில் ஆலை நடத்தியவர்களுக்கு, சந்தன கட்டை கடத்தப்பட்டது தெரிந்தது. அங்கு வனத்துறையினர் சென்று, 7 டன் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.ஆலை நடத்திய, மகாராஷ்டிராவை சேர்ந்த டகாடு புலாரி, பகவத் கிரி ஆகியோருக்கு, மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங் ரவி, கடந்த, 21ம் தேதி 'சம்மன்' அனுப்பியுள்ளார். அதில், 21 நாட்களுக்குள் சேலம் மாவட்ட வன அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ