உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 கடைக்கு ரூ.1 லட்சம் அபராதம்

புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 கடைக்கு ரூ.1 லட்சம் அபராதம்

சேலம்: சேலம் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலை-மையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், பி.டி.ஓ.,க்கள், சுகாதார ஆய்வாளர்கள், போலீசார் அடங்கிய குழுவினர், பல்வேறு பகு-திகளில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அதில் கொண்டலாம்-பட்டியில், 2 கடைகள், இரும்பாலை, ஓமலுாரில் தலா ஒரு கடை என, 4 கடைகளில் புகையிலை பொருட்கள், 8.5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, அந்த கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டன. அத்-துடன், 4 கடைகளுக்கும் தலா, 25,000 வீதம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இரு கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள் இருப்பதை கண்டுபிடித்து, 2 கிலோ பறிமுதல் செய்து, தலா, 2,000 வீதம், 4,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை