உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கூடைப்பந்து போட்டியில் தலச்சேரி அணி வெற்றி

கூடைப்பந்து போட்டியில் தலச்சேரி அணி வெற்றி

சேலம்: சேலத்தில் நடந்த தென்மண்டல கூடைப்பந்து போட்டியில், சேலம், தலச்சேரி அணி வெற்றி பெற்றது. சாய் கூடைப்பந்து கழகம் சார்பில், தென் மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி சேலம், செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், கோகுலநாத மகாஜன மேல்நிலைப் பள்ளியிலும் நேற்று துவங்கியது. செயின்ட்ஜான்ஸ் பள்ளியில் இரண்டு போட்டிகள் நடந்தன. முதல் போட்டியில் நாகர்கோவில் மகளிர் அணியினரும், தலச்சேரி அணியினரும் மோதினர். தலச்சேரி அணியினர் 51-21 என்ற புள்ளிக்கணக்கில் நாகர்கோவில் அணியை தோற்கடித்தனர். இரண்டாவது போட்டியில், சேலம் அணியினர் 52-11 என்ற புள்ளிக்கணக்கில் திருச்சூர் 'பி' அணியை தோற்கடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை