உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேவை மைய இன்டர்நெட் கேபிள்; துண்டித்து கிடப்பதால் மக்கள் அவதி

சேவை மைய இன்டர்நெட் கேபிள்; துண்டித்து கிடப்பதால் மக்கள் அவதி

பனமரத்துப்பட்டி : பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 20 கிராம ஊராட்சிகளில் சேவை மையம் கட்டடம் உள்ளது. அதற்கு இன்டர்நெட் இணைப்பு, கேபிள் ஒயர் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்துக்கு சொந்தமான கம்பம் வழியே, கேபிள் ஒயர் சேவை மைய கட்டடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.அதில் பனமரத்துப்பட்டி, திருவள்ளுவர் சாலையில் மத்திய கூட்டுறவு வங்கி அருகே மின் கம்பத்தில் இருந்த கேபிள் ஒயர் அறுந்து விழுந்துள்ளது. வங்கி, தனியார் கடை முன் கிடக்கும் ஒயரால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அந்த கேபிள் ஒயர் மீது இரு சக்கர, கனரக வாகனங்கள் ஏறி செல்வதால் சேதமடைந்து வருகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், 'மின் கம்பத்தில் இருந்த கேபிள் ஒயர் விழுந்து இரு மாதங்களாகியும் மீண்டும் எடுத்து கம்பத்தில் கட்டவில்லை. இதுபற்றி பனமரத்துப்பட்டி பி.டி.ஓ.,விடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மண்ணில் கிடக்கும் கேபிள் ஒயரால், மக்கள் தடுக்கி விழுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை