உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எஸ்.ஐ., பாதுகாப்புக்கு துப்பாக்கி பயன்படுத்த அனுமதி

எஸ்.ஐ., பாதுகாப்புக்கு துப்பாக்கி பயன்படுத்த அனுமதி

சேலம்: தமிழகம் முழுதும் போலீஸ், தீயணைப்பு, சிறை, வனம் ஆகிய துறைகளின் பாதுகாப்புக்கு துப்பாக்கி பயன்படுத்தப்படுகிறது. இந்த துப்பாக்கிகள், ஆண்டுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்யப்படும். அதன்படி நேற்று, சேலம், குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படையில், 500 துப்பாக்கிகளுக்கு சர்வீஸ் செய்யும் பணி நடந்தது. அதை, சென்னை சிறு படைகலன் எஸ்.பி., முருகேசன் பார்வையிட்டார்.தொடர்ந்து முருகேசன் கூறுகையில், ''எஸ்.ஐ., முதல் ஏ.எஸ்.பி.,க்கள், பணியில் இருக்கும் வரை பாதுகாப்புக்கு துப்-பாக்கி பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு போதிய அளவில் அளவில் துப்பாக்கிகள் உள்ளன. சேலம் மாவட்டத்தில், 500 துப்பாக்கிகள் சரிபார்க்கும் பணி நடந்தது. அதில் பயன்படுத்-தப்படாத துப்பாக்கிகள் திருப்பி எடுத்துக்கொள்ளப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ