மேலும் செய்திகள்
கோவில் உண்டியலை உடைக்க முயற்சி
2 minutes ago
பட்டப்பகலில் கணவர் கடத்தல்: மனைவி புகாரால் விசாரணை
3 minutes ago
சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
28-Dec-2025
சேலம்: சேலம், கோகுலநாதா இந்து மகாஜன மேல்நிலைப்பள்ளி தொடங்கி, 100 ஆண்டு நிறைவு பெற்றதை ஒட்டி, அப்பள்ளி சார்பில் மாவட்ட அளவில் கூடைப்பந்து போட்டி, கடந்த, 26 முதல், 28 வரை நடந்தது. 11 ஆண்கள் அணி, 6 பெண்கள் அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில், 4 ரோடு சிறுமலர் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம், எருமாபாளையம் குளூனி வித்யா நிகேதன் பள்ளி, 2ம் இடம் பிடித்தது.பெண்கள் பிரிவில் குகை செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி அணி முதலிடம், அழகாபுரம் ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் பள்ளி, 2ம் இடம் பிடித்தது. அந்த அணியினருக்கு, தமிழக கூடைப்பந்து கழக பொருளாளர் பாலமுருகன், பரிசு வழங்கினார். சேலம் மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் முகுந்தன், பள்ளி தலைவர் விஸ்வநாதன், செயலர் ரகுநாதன், நுாற்றாண்டு விழாக்குழு தலைவர் மாணிக்கம், தலைமை ஆசிரியர் நஞ்சைய்யா, உடற்கல்வி ஆசிரியர் பாலமுருகன் பங்கேற்றனர்.
2 minutes ago
3 minutes ago
28-Dec-2025