உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பனி, குளிர், மழை, வெயில்: ஏற்காட்டில் மாறிய சீதோஷ்ணம்

பனி, குளிர், மழை, வெயில்: ஏற்காட்டில் மாறிய சீதோஷ்ணம்

ஏற்காடு: ஏற்காட்டில் இரு வாரங்களாக இரவில் மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை முதல் ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் சூழ்ந்து வெள்ளை போர்வை போர்த்தியது போன்று காட்சியளித்தது. இதனால் சற்று துாரத்தில் வரும் வாகனங்கள் கூட தெரியாமல், வாகனங்களை ஓட்ட முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர். அனைவரும், வாகன முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே ஓட்டிச்சென்றனர்.தொடர்ந்து காலை கடும் குளிர் நிலவியதால் கூலி வேலைக்கு செல்லும் உள்ளூர் மக்கள், வீட்டில் முடங்கினர். மதியம், 12:05 மணிக்கு மழை பெய்யத்தொடங்கி, 20 நிமிடம் நீடித்தது. இதையடுத்து பனிமூட்டம் விலகி வெயில் அடிக்க தொடங்கியது. மாலை, 4:00 மணிக்கு மேல் மீண்டும் குளிர் வீசியது. சீதோஷ்ண நிலை மாறி மாறி வந்ததால் உள்ளூர் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை