| ADDED : ஜூன் 18, 2024 07:11 AM
சேலம் : சேலத்தில் நேற்று நடந்த, பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.நாடு முழுவதும் நேற்று, இஸ்லாமிய மக்களால் தியாக திருநாளாக கருதப்படும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் சூரமங்கலம், சின்ன அம்மாபாளையம் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். தொழுகை முடிந்து, ஒருவரையொருவர் கட்டித்தழுவி, வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.சேலம் நகரம், அம்மாபேட்டை, உடையாப்பட்டி, சூரமங்கலம், கன்னங்குறிச்சி, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள மசூதிகளில், சிறப்பு தொழுகை நடத்தப்பட்டன. ஏழை, எளிய மக்களுக்கு குர்பாணி வழங்கப்பட்டது. * ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள முகாலாயா மஜீத்தில், காலை, 8:00 மணிக்கு முத்தவல்லி அஜிஸ் தலைமையில், இஸ்லாமியர்கள் திரண்டு அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, கடைவீதி வழியாக சென்று தொழுகை நடைபெறும் ஜாமியா மசூதியை அடைந்தனர். அங்கு ஹஜ்ரத் கலில் அகமது தலைமையில், 8:45 மணிக்கு சிறப்பு தொழுகை துவங்கி, 75 நிமிடம் நடைபெற்றது. ஏராளமான இஸ்லாமியர் பங்கேற்றனர்.