உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டிரைவரின் உயிரை பறித்தது வேகம்

டிரைவரின் உயிரை பறித்தது வேகம்

சேலம்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுாரை சேர்ந்த திருமுருகன் மகன் சதீஷ், 20. இவர் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் தங்கி, தனியார் ஆம்புலன்ஸில் டிரைவராக பணிபுரிகிறார். வாழப்பாடி, அத்தனுார்பட்டியை சேர்ந்த கந்தையன் மகன் விக்கி, 22. டிரைவரான இவரும், சதீஷம், 'ஆர் 15' பைக்கில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு வாழப்பாடியில் இருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்தனர். விக்கி, அதிவேகமாக ஓட்டி வந்த நிலையில், மாசிநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில் இருந்து, 100 மீ.,ல், சாலையில் கிடந்த கல்லில் பைக் மோத, இருவரும் துாக்கி வீசப்பட்டனர். விக்கி, ஹெல்மெட் அணியாத நிலையில் சம்பவ இடத்தில் பலியானார். காயம் அடைந்த சதீஷ், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி