உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / படியில் தொங்கியபடி மாணவர்கள் பயணம்; மலை கிராமத்துக்கு கூடுதல் பஸ் அவசியம்

படியில் தொங்கியபடி மாணவர்கள் பயணம்; மலை கிராமத்துக்கு கூடுதல் பஸ் அவசியம்

ஏற்காடு: ஏற்காட்டில் இருந்து, 22 கி.மீ.,ல் வெள்ளக்கடை ஊராட்சி மோட்டூர் கிராமம் உள்ளது. அங்கிருந்து பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்வோர் என, தினமும், 100க்கும் மேற்பட்டோர் ஏற்காடு வந்து செல்கின்றனர். ஆனால் அங்கிருந்து மக்கள் வந்து செல்ல, 36 இருக்கை கொண்ட ஒரே ஒரு பஸ் மட்டும், போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படுகிறது. இதனால் அந்த கிராமத்துக்கு செல்லும் அனைவரும் ஒரே பஸ்சில் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது.போதிய இருக்கை வசதி இல்லாததால் முதியார், பள்ளி மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும், அந்த பஸ்சில், 70 பேருக்கு மேல் பயணிக்கின்றனர். பலர் படியில் தொங்கி கொண்டு செல்கின்றனர். மலைப்பாதை மிக குறுகலாக உள்ளதால், படியில் பயணிப்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அதனால் குறிப்பிட்ட நேரங்களில் கூடுதலாக பஸ்கள் இயக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கிராம மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை