உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பூலாவரி அக்ரஹாரம் ஏரி தொடர் மழையால் நிரம்பியது

பூலாவரி அக்ரஹாரம் ஏரி தொடர் மழையால் நிரம்பியது

வீரபாண்டி : நான்கு மாதங்களுக்கு மேலாக காய்ந்திருந்த பூலாவரி அக்ரஹாரம் ஏரி, தொடர் மழையால் நிரம்பியுள்ளது.சேலம், பூலாவரி அக்ரஹாரம் ஏரிக்கு கஞ்சமலையில் இருந்தும், அமானி கொண்டலாம்பட்டி, காட்டு வளவு, பாரப்பட்டி பகுதிகளில் இருந்தும் கழிவுநீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்து, சேலத்தில் வெயிலின் தாக்கம் கோடைக்கு முன்பே கொளுத்தியதால், ஏரிக்கு நீர்வரத்து குறைந்து, காய்ந்த சீமை கருவேல மரங்களால் நிரம்பியிருந்தது.இந்நிலையில், சேலம் சுற்றுவட்டாரத்தில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால், கஞ்சமலையில் இருந்து அதிகளவில் தண்ணீர் ஏரிக்கு வந்ததால் நிரம்பியுள்ளது. ஏரி தண்ணீரை நம்பியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சுற்று வட்டாரத்திலும் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை