| ADDED : மார் 13, 2024 07:23 AM
சேலம் : பனை ஏறும் இயந்திரம் கண்டுபிடிப்போர், விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:
பனை மர சாகுபடியை ஊக்குவிக்க, பனை மேம்பாட்டு இயக்கத்தில் பனை விதைகள், மரக்கன்று வழங்குதல், பனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல், பனை ஏறுபவர்களுக்கு கருவி வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பனை மரத்தில் எந்த ஆபத்துமின்றி எளிதாக ஏறுவதற்கான கருவிகளை கண்டுபிடிக்கும் பல்கலை, தனியார் நிறுவனம், தன்னார்வலர், விவசாயிகளை ஊக்குவிக்க, சிறந்த பனை மரம் ஏறும் கருவி கண்டுபிடிப்போருக்கு விருது வழங்கப்படும். அதனால் கருவி கண்டு பிடித்துள்ளவர்கள், www.tnhorticuture.gov.inஎன்ற இணையதளத்தில் வரும், 15க்குள் விண்ணப்பிக்கலாம்.