உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காரில் நுழைந்த இரும்பு ராடுகள் உயிர் தப்பிய பா.ம.க., பிரமுகர்

காரில் நுழைந்த இரும்பு ராடுகள் உயிர் தப்பிய பா.ம.க., பிரமுகர்

மகுடஞ்சாவடி: இளம்பிள்ளையை சேர்ந்தவர் பச்சமுத்து, 50. பா.ம.க.,வில் சேலம் மாவட்ட பசுமை தாயக செயலராக உள்ளார். நேற்று மாலை, 4:00 மணிக்கு, 'கியா' காரில் சின்னப்பம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அதேநேரம் பெருமாகவுண்டம்பட்டியை சேர்ந்த சுகவனேஷ்-வரன், 24, மினி சரக்கு ஆட்டோவில், கட்டட பயன்பாட்டுக்கு-ரிய இரும்பு ராடுகளை ஏற்றி ஓட்டி வந்துகொண்டிருந்தார். இவர், பச்சமுத்து காரை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்.இளம்பிள்ளை - சின்னப்பம்பட்டி பிரதான சாலை, கறிக்கடை திட்டு பகுதியில் ஆட்டோவில் பிரேக் போட்டார். அப்போது அதில் இருந்த இரும்பு ராடுகள், பச்சமுத்து காரின் பின்புற கண்-ணாடியை உடைத்து உள்ளே சென்றது. பின்சீட்டில் யாரும் இல்-லாததால், உயிரிழப்பு தடுக்கப்பட்டது. பச்சமுத்துவும் அதிர்ஷ்ட-வசமாக உயிர்தப்பினார். இச்சம்பவத்தால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மகுடஞ்சாவடி போலீசார் விசா-ரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ