உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.3.50 கோடி சுருட்டியவர் ஓராண்டுக்கு பின் வளைப்பு

ரூ.3.50 கோடி சுருட்டியவர் ஓராண்டுக்கு பின் வளைப்பு

சேலம், மேட்டூர், புது காலனியை சேர்ந்த மகாதேவ் என்பவர், சேலம் எஸ்.பி.,யிடம், 2024, பிப்., 17ல் புகார் அளித்தார். அதில், 'தமிழக அரசின், டி.என்.பி.எஸ்.சி., மூலம், வேலை வாங்கி தருவதாக கூறி, கொங்கணாபுரத்தை சேர்ந்த நித்யானந்தம், 22 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டார்' என தெரிவித்திருந்தார். இதுகுறித்து விசாரித்த, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நித்யானந்தத்தை கைது செய்தனர்.விசாரணையில் மேட்டூர் சுற்றுப்பகுதியில் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, மேலும் பலர் மோசடியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களை பிடிக்க, இன்ஸ்பெக்டர்கள் பாரதிமோகன், வளர்மதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் விசாரணையில் கொங்கணாபுரம், காளிப்பட்டி சாலையை சேர்ந்த சந்தோஷ்குமார், 48, என்பவர், பல பேரிடம், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 3.50 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை, ஓராண்டாக தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று, சித்தனுாரில் இருந்த அவரை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை