சமாதான பேச்சில் சமரசம் இல்லை
வாழப்பாடி, வாழப்பாடி, வேப்பிலைப்பட்டி மாரியம்மன், செல்லியம்மன் கோவிலில் இம்மாத இறுதியில் தேர் திருவிழா நடத்த, இந்து சமய அறநிலைதுறைக்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அப்பகுதியில் இரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இடையே பூசாரி நியமிப்பதில் கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் வாழப்பாடி தாசில்தார் அலுவலகத்தில், நேற்று சமாதான பேச்சு நடந்தது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை.இதுகுறித்து தாசில்தார் ஜெயந்தி கூறுகை யில், ''உடன்பாடு ஏற்படாததால், இரு நாட்களில் இரு தரப்பினரும் பேசி முடிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை எனில், கோவில் விழா நடத்த அனுமதி வழங்கப்படாது,'' என்றார்.