உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆயிரம் குதிரை அண்ணமார் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்

ஆயிரம் குதிரை அண்ணமார் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்

ஓமலுார்: ஓமலுார் அருகே செம்மாண்டப்பட்டி, தலையாரியூரில் உள்ள ஆயிரம் குதிரை அண்ணமார் சுவாமி கோவில் கும்பாபிேஷக விழாவையொட்டி, ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்று இரவு பிரதிஷ்டானம், யாக வேள்வி தொடங்கியது. நேற்று காலை, 2ம் கால யாக வேள்வி, கோ பூஜை, மஹா பூர்ணாஹூதி முடிந்த பின், காலை, 8:15 மணிக்கு நுழைவாயில் கோபுரம், பரிவார தெய்வ கலசத்துக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிேஷகம் நடந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது, பிரத்யேக குழாய் வழியே புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலை சுற்றி அமைக்கப்பட்ட பிரமாண்ட பந்தலில் அன்னதானம் நடந்தது. விழா நிர்வாக குழுவினர், ஊர்மக்கள் சாப்பிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை