மேலும் செய்திகள்
93 எல்.இ.டி., விளக்கு பொருத்த முடிவு
29-Nov-2025
ஓமலுார்: த.மா.கா.,வின், சேலம் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஓமலுாரில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் தலைமை வகித்தார். அதில் வரும் சட்டசபைத்தேர்தல் பணி, புது உறுப்பினர்கள் சேர்ப்பு குறித்து பேசினார். மேலும் தலைவர் வாசன் பிறந்தநாளன்று, ஓமலுாரில், 5,000 பேருக்கு அன்னதானம் வழங்குவது; ஓமலுார் தொகுதியை, த.மா.கா.,வுக்கு ஒதுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட நிர்வாகி ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ரகுநந்தகுமார், ஓமலுார், காடையாம்பட்டி வட்டார தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
29-Nov-2025