உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இன்று நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர், சோமேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம்

இன்று நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர், சோமேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம்

ஓமலுார்: நங்கவள்ளியில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில், சோமேஸ்வரர் கோவில் கும்பாபி ேஷகம் இன்று நடைபெறவுள்ளது.நங்கவள்ளியில், 900 ஆண்டுகள் பழமையான லட்சுமி நரசிம்மர், சோமேஸ்வரர் கோவில் உள்ளது. சைவம் மற்றும் வைணவம் ஒரு சேர அமைந்துள்ள இக்கோவிலில் இன்று காலை, 9:30 மணி முதல் 11:00 மணிக்குள் கும்பாபி ேஷகம் நடைபெவுள்ளது. கடந்த, 20ல் சுதர்சன ேஹாமத்துடன் விழா துவங்கியது. 21ல், காவிரி ஆற்றில் புனித நீர் கொண்டு வரப்பட்டது. நேற்று முன்தினம் மூலவர் மூர்த்திகள் மற்றும் கோபுர விமானங்களுக்கு எண் வகை மருந்து சாற்றுதல், முதற்கால யாக வேள்வி துவங்கியது.நேற்று இரண்டாம், மூன்றாம் கால யாக வேள்வி நடந்தது. இன்று காலை நான்காம் கால யாக வேள்வி, நான்கு மறை வேள்விகளான உயிர் ஊட்டுதல், கண் திறப்பு, வேள்வி நிறைவு செய்தல், யாத்ரா தானம், கும்ப ப்ராயணம் முடிவுற்று கும்பாபி ேஷகம் நடைபெறவுள்ளது.அதன் பின் மஹா அபிேஷகம், திருமுறை முற்றோதுதல், பிரசாதம் வழங்கல், சர்வ தரிசனம், திருக்கல்யாண வைபோகம், ரிஷப வாகனத்தில் திருவீதி உலா நடைபெறவுள்ளது. இதனால் நங்கவள்ளி திருவிழா கோலம் பூண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை