உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மலைப்பாதை ஓரத்தில் ஓடும் மழைநீரில் குளித்து குதுகளிக்கும் சுற்றுலாப் பயணிகள்

மலைப்பாதை ஓரத்தில் ஓடும் மழைநீரில் குளித்து குதுகளிக்கும் சுற்றுலாப் பயணிகள்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த இரண்டு வாரங்களாக தினம்தோறும் மழை பெய்து வருகிறது. அதை தொடர்ந்து இன்று காலை முதல் ஏற்காடு முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணபட்டு பின்னர் லேசாக வெயில் அடிக்க தொடங்கியது. இந்த நிலையில் மதியம் 1.20 மணியளவில் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்ய தொடங்கி 3.30 மணி வரை சுமார் இரண்டு மணி நேரம் கொட்டி தீர்த்து. இனறு மதியம் பெய்த மழையால் ஏற்காடு வரும் மலை பாதையின் ஓரத்தில் உள்ள திடீர் அருவிகள் மற்றும் சாலையில் மலை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்காடு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளை சிலர் மலை பாதை ஓரத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரில் மழையில் நனைந்த படி எந்த பாதுகாப்பும் இல்லாத வகையில் குளித்தும், ஆபத்தை அறியாமல் புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர். இதனால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் கூறி செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி