உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏற்காடு வரத்தொடங்கிய சுற்றுலா பயணியர்

ஏற்காடு வரத்தொடங்கிய சுற்றுலா பயணியர்

ஏற்காடு: ஏற்காட்டில் இரு வாரங்களுக்கு முன் கனமழை பெய்தது. இதனால் அதன் மலைப்பாதை, கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில், பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு, சீரமைப்பு பணி நடந்தது வந்தது. மாவட்ட நிர்வாகமும், சுற்றுலா பயணியர் வர தடை விதித்திருந்தது. இதனால் ஏற்காடு வெறிச்சோடியது. 3 நாட்களுக்கு முன், சாலை உள்ளிட்ட சீரமைப்பு பணி முடிந்தது. இந்நிலையில் ஞாயிறான நேற்று, ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணியர் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. காலையில் குறைந்த அளவில் சுற்றுலா பயணியர் வந்தனர். மதியத்துக்கு மேல் கணிசமான அளவில் சுற்றுலா பயணியர் வந்தனர். இதனால் இரு வாரங்களாக வெறிச்சோடியிருந்த நிலை மாறியது. படகு இல்லத்தில் சுற்றுலா பயணியர், படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இருப்பினும் அண்ணா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், சேர்வராயன் கோவில், லேடீஸ், ஜென்ட்ஸ் சீட்டுகள் உள்ளிட்ட இடங்களில், சுற்றுலா பயணியர் எண்ணிக்கை குறைந்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ