உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாக்கடை கால்வாய் பணி நிறுத்தியதால் அவதி

சாக்கடை கால்வாய் பணி நிறுத்தியதால் அவதி

சேலம், சேலம், பேர்லண்ட்ஸ் தோப்புக்காட்டில், 8 கோடி ரூபாய் மதிப்பில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி, கடந்த ஆண்டு தொடங்கி நடந்த நிலையில், பாதியில் நிறுத்தப்பட்டது. குறிப்பாக, பிருந்தாவன் சாலை, 5வது கிராஸ் சாலையில் பணி நிறைவு பெறாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. கால்வாய்க்கு, 10 அடி அகலத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு, வீடுகளுக்குள் செல்ல முடியாமல் மக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சாக்கடை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தின் மீது கட்டைகள் வைத்து வீடுகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் குழந்தைகள் விழுந்துவிடுவரோ என குடும்பத்தினர் அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் நிறுத்த முடியாத சூழல் உள்ளது. இந்த அவதி, 5 மாதங்களாக தொடர்வதாக, மக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் செந்தில் கூறுகையில், ''இத்திட்டத்துக்கு பணப்பற்றாக்குறையால் பணி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக, 15 லட்சம் ரூபாய்க்கு அனுமதி கிடைத்து விட்டதால், ஒரு வாரத்தில் பணி தொடங்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை