உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மருத்துவமனை சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

மருத்துவமனை சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

ஏற்காடு, ஏற்காடு டவுனில் இருந்து, 1 கி.மீ.,ல், அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. அதற்கு செல்லும் முக்கிய சாலை சீரழிந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறியபடி சென்று வருகின்றனர். மருத்துவமனை அடுத்து, தாலுகா அலுவலகம், ஏற்காடு நீதிமன்றம் உள்ள நிலையில், அங்கு செல்லும் அதிகாரிகள், சீரழிந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். நோயாளிகளும் சிரமத்துக்கு இடையே செல்லும் அவலம் தொடர்கிறது. குறிப்பாக இரவில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். உயிரிழப்பு ஏற்படும் முன், ஒன்றிய நிர்வாகம் இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி