உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பிப்., 6 முதல் சேலம் வழியே வந்தே பாரத் சிறப்பு ரயில்

பிப்., 6 முதல் சேலம் வழியே வந்தே பாரத் சிறப்பு ரயில்

சேலம்: சென்னை - கோவை இடையே சேலம் வழியே பிப்., 6 முதல், 'வந்தே பாரத்' வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை: சென்னை, சென்ட்ரலில், பிப்., 6 காலை, 7:10க்கு புறப்படும், 'வந்தே பாரத்' சிறப்பு ரயில் அன்று மதியம், 2:15 மணிக்கு கோவையை அடையும். மறுமார்க்கத்தில் மதியம், 3:05க்கு புறப்படும் ரயில், இரவு, 9:50 மணிக்கு சென்னையை அடையும். இந்த சிறப்பு ரயில் பிப்., 27 வரை செவ்வாய்தோறும் இயக்கப்படும். இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை