உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்

வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்

சேலம்: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில், 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம், அஸ்தம்பட்டி மைய தாலுகா அலுவலக வளாகத்தில், நேற்று மதியம், 3:00 மணிக்கு காத்-திருப்பு போராட்டம் நடந்தது. மாநில முன்னாள் துணைத்தலைவர் நல்லாகவுண்டர் தலைமை வகித்தார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி பேசினார்.அதில் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் குடிநீர், கழிப்-பறை உள்பட இணைய வசதியுடன்நவீனமாய-மாக்குதல்; வி.ஏ.ஓ.,க்கான கல்வி தகுதியை பட்-டப்படிப்பாக மாற்றி அமைத்தல்; 10 ஆண்டு பணி முடித்தவருக்கு தேர்வு நிலை வி.ஏ.ஓ., என்றும், 20 ஆண்டு பணி முடித்தவருக்கு, சிறப்புநிலை வி.ஏ.ஓ., என்றும் அரசாணை வெளியிடுதல் உள்-ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். வி.ஏ.ஓ., சங்க மாவட்ட தலைவர் மோகன்ராஜ், செயலர் ரமேஷ், பொருளாளர் வாசுதேவன் உள்-பட, 14 வட்டத்தை சேர்ந்த, வி.ஏ.ஓ.,க்கள் பங்-கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி