மேலும் செய்திகள்
துணிக்கடை ஊழியர் தற்கொலை
20-Sep-2024
ஓமலுார்: வேட்டி-சட்டையை எரித்ததை கண்டித்த கணவனை, 55 வயது மனைவி கொலை செய்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே காமலாபுரம், ஆசாரி தெருவை சேர்ந்தவர் செல்வம், 67; இவரது மனைவி பூங்கொடி, 55; கரும்பாலை தொழிலாளர்கள். இவர்களின் மகன் வெங்-கடேஷ், 38, பக்கவாதத்தால் படுத்த நிலையில் உள்ளார். மற்-றொரு மகன் ரமேஷ், 36, பெற்றோர் வீடு அருகே வசிக்கிறார்.நேற்று காலை, கட்டிலில் செல்வம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஓமலுார் போலீசார் சென்றனர். கட்டில் அருகே ரத்தக்கறையுடன் கிடந்த அரிவாள்ம-னையை கைப்பற்றி பூங்கொடியை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: செல்வம், பூங்கொடிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. அடிக்கடி குடித்துவிட்டு தகாத வார்த்தையில் பேசி சண்டையிடுவதால், இளைய மகன் ரமேஷ் அவரது குடும்பத்துடன் தனியாக வசிக்கிறார். நேற்று முன்தினம் காலை, தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்-திரம் அடைந்த பூங்கொடி, கணவரது சட்டை, வேட்டிகளை வீட்-டுக்கு வெளியே போட்டு தீ வைத்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்று திரும்பிய செல்வம், வேட்டி, சட்டையை எரித்தது குறித்து தெரிந்து மனைவியை கண்டித்-துள்ளார். இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதைய-டுத்து கட்டிலில் துாங்கிக்கொண்டிருந்த கணவன் கழுத்தை, அரி-வாள்மனையால் அறுத்து பூங்கொடி கொன்றுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர்.
20-Sep-2024